ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதிகளில் அரசு கேபிள் டிவி இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தாமல், உடனடியாக இணைப்பு வழங்க, உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தனியார் அலைவரிசைகளுக்கு இணையாக, அதிக எண்ணிக்கையிலான சேனல்கள் மிக குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கப்பட்டு வருவதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார். எனினும், அரசு கேபிள் டிவி சேவை குறைந்த மாத சந்தா தொகையில் அரசு கேபிள் டிவி- உள்ளூர் ஆப்பரேட்டர்களால் வழங்கப்படுவதை, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டிடவும், உறுதி செய்திடவும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் முன்வர வேண்டும் எனவும் பொதுமக்களும், சமூக ஆவலர்களும் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.
