எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்திட வேண்டும் என முக்கூடல் பேரூராட்சி கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இக்கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில், தற்போது அங்கு இரவு நேர மருத்துவ பணிக்காக டாக்டர் சாமுவேல்ராஜ் அவர்கள் நியமனம் செய்யட்டுள்ளார்.இந்நிலையில் தங்களது கோரிக்கையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செய்து நிறைவேற்றித்தந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ .சிவ பத்ம நாதனை , முக்கூடல் பே௹ராட்சி கவுன்சிலர் சிந்துஜா முத்துச் சாமி தலைமையில் பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, வக்கீல் பர்வீன் ராம், முருகன், விஜய சேகர் முருகேசன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன் கழக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் இளைஞரணி அசோக், அருணா பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தென்காசி:முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் நியமனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்ம நாதனை முக்கூடல் பகுதி பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்!!!
3/08/2025
0
