புதுச்சேரி:மகளிர் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் மகளிர் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா கோலாகலம்!!!
March 17, 2025
0
புதுச்சேரியில் அதிதி ஹோட்டலில் PARA சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் மகளிர் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது மற்றும் வெள்ளி பொற்காசு வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சங்கர் விஸ்வநாதன் விஐடி, வேலூர், புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் ஆர். செல்வம் மற்றும் முனைவர்.வி.முத்து தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம் புதுச்சேரி மகளிர்க்கு விருது வழங்கப்பட்டது. மேலும் முனைவர். ரமேஷ் குமார் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மதுரை), திவ்யா (RDNAB First Grade கல்லூரி பெங்களூரு) , சிலம்பரசி (தெய்வானை மகளிர் கல்லூரி விழுப்புரம்) தலைமை தாங்கி விழாவை சிறப்பாக நடத்திட செயல்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் தொழில் முனைவர்கள், மகளிர் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மகளிர் பேராசிரியர்கள் விருதுகள் மற்றும் வெள்ளி பொற்காசுகள் பெற்றுக் கொண்டு மேலும் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்த இதற்கு உறுதுணையாக உமாசங்கர், ராஜன், முருகானந்தம், நல்லசிவம், பெணவொலண்ட் அமைப்பு பொருளாளர் ரகோத்தமன் மற்றும் பெணவொலண்ட் அமைப்பு தலைவர் முனைவர். விஜயகுமாருக்கு நன்றி கூறினர்.