சமீபத்தில், இந்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அரைத்தள அச்சுத்தொகுதி (Semiconductor Chip) 2025 வருட இறுதிக்குள் TATA Electronics ஆலையில் இருந்து வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ஆலை மாதத்திற்கு 50,000 வேஃபர்களை (Wafers) உற்பத்தி செய்யக்கூடியது. இதற்கு கூடுதலாக, மேலும் ஐந்து உற்பத்தி நிலையங்கள் அரைத்தள அச்சுத்தொகுதிகள் தயாரிப்பு மற்றும் பொருத்துவதற்க்காக, 'இந்தியா அரைத்தள மிஷன்' (India Semiconductor Mission - ISM) என்ற முக்கிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்த திட்டம் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அரைத்தள மற்றும் காட்சி வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு சுற்றுச்சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம். இதற்காக மொத்தமாக ரூ.76,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ISM திட்டத்தில் Semiconductor Fabs, Display Fabs போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்க Production-Linked Incentive (PLI) திட்டம் உள்ளது. மேலும், Design-Linked Incentive (DLI) திட்டம் மூலம் அரைத்தள அச்சுத்தொகுதிகளின் வடிவமைப்பை ஊக்குவிக்கிறது. இது, நம் நாடு சார்ந்த அறிவுசார் சொத்துக்களை (IP) உருவாக்கவும், Transfer of Technologies (ToT) ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள மற்ற நடவடிக்கைகள்:
• Digital RISC-V (IR-V) திட்டம் – மைக்ரோப்ராசஸர்கள் தயாரிப்புக்காக
• Modified Special Incentive Package Scheme (M-SIPS) – அரைத்தள அச்சுத்தொகுதிகளுக்காக
• Chips to Start-up (C2S) திட்டம் – உயர்தர பொறியாளர்களை பயிற்றுவித்து எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2030க்குள் மொத்தமாக USD 500 பில்லியன் அளவிற்கு மின்னணு துறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய அரைத்தள சந்தை 2026க்குள் USD 55 பில்லியன் அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல Semiconductor நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் தளங்களை சீனாவிலிருந்து மாற்றி கொண்டு வருவதால் இது சாத்தியமாகிறது. மேலும், இந்திய அரசு சீனாவிலிருந்து அரைத்தள அச்சுத்தொகுதிகளுக்கான இறக்குமதி சார்பினை 55% வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.இந்தியா உலக அரைத்தளத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், உலகளாவிய திடமான மற்றும் நிலையான தொழில்துறையை உருவாக்குவதற்கான முன்முயற்சி ஆகும்.
விநியோக சங்கிலியை கருத்தில் கொண்டு, சீனாவில் இருந்து பரவிய COVID-19 வைரஸினால் ஏற்பட்ட விநியோக சங்கிலி குறுக்கீடு மற்றும் அதன் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட முடக்க நிலை இந்த முக்கியத் துறையை பாதித்தது.இந்த பிரம்மாண்டமான நடவடிக்கைகள் மூலம், இந்தியா தன் திறமைமிக்க மனிதவளத்துடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் (R&D) அதிக முதலீடு, உயர்ந்து வரும் தரவுத்தள மைய தேவைகள் மற்றும் பசுமை மாற்ற முயற்சிகளுடன், 2030க்குள் உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறவுள்ளது. இது 100ஆம் ஆண்டு சுதந்திரத்தை நோக்கிச் சென்று, 2047ஆம் ஆண்டில் 'விக்சித் பாரத்' என்ற ‘வளர்ந்த இந்தியா’ எனும் நோக்கம் நிறைவேறும்.