இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக சேவகர் அசோக்குமார், வேலூர் மாவட்ட செயலாளர் ரோஸ், அப்பகுதி கிளை பொறுப்பாளர்கள் ரெஜினா, சத்யா மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்க பொறுப்பாளர் அருணகிரி ஆகியோர் இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் மூன்று நபர்களுக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், சங்கத்தில் புதிதாக பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நல திட்ட உதவி இலவச பட்டு சேலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கயல்விழி, மாநில பொருளாளர் செல்வி சீதா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.
வேலூர்:காட்பாடியில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வுஓய்வூதிய ஆணை மற்றும் நலதிட்டம் வழங்கும் விழா!!!
March 23, 2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, எல்.ஜி.புதூர், கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக உழைப்பாளிகளின் பாதுகாவலரும், புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க தலைவருமான டி.வேல்முருகன் தலைமையில் அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.