கோவை:தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
March 16, 2025
0
கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி கோவை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து கொண்டும் கண்டன பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழ்நாடு அரசு இந்த சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை தமிழக வெற்றி கழகம் சார்பில் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தவெக பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் விஜய் வாழ்க தவெக வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினர்.பேட்டி- சம்பத்குமார் த.வெ.க கோவை மாநகர மாவட்ட செயலாளர்.