கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்!!!
March 16, 2025
0
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாலுகாக்களை உள்ளடக்கி பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாபெரும் 15:3:2025கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வை மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் திருமதி அபிராமி செந்தில்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள் கோவை புறநகர் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார், இந்நிகழ்வில் மாநிலத் தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் செல்லதுரை, மூத்த தலைவர் கன்னி முத்து, மாநில இணை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்வில் அப்பு குட்டி என்கிற கிருஷ்ணசாமி தாவளம் ஜெகதீஷ், கிணத்துக்கடவு மணிகண்டன், தம்பு(எ) ரங்கநாதன், பூக்கடை ஜெகநாதன், கேபிள் சுப்ரமணியம், இரும்பு கடை சண்முகம், கார்த்திகேயன், மீசை கோவிந்த், வேணு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் கண்ணன், அசாருதீன், முரளிதரன்,சபரி ,சந்துரு,அதினேஷ் ஸ்ரீதர், விவேக், பாஸ்கர்,காளிதாஸ் மாணவர் அணி நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பட்டினை இளைஞர் அணி கல்யாண் குமார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.