கோவை:பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு அச்சம் தவிர் தேஜஸ் 2025 என நடைபெற்ற இதில் சாதனை மகளிர்க்கு பாரதி கண்ட புதுமை பெண்கள் விருது வழங்கி கவுரவிப்பு!!!

sen reporter
0

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக தொடர்ந்து பல்வேறு சேவைத் திட்டங்கள்,சமூக நலப் பணிகள், கல்வி,மருத்துவ நிதி உதவிகள் ,இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ் கவிஞர் மகாகவி பாரதியை போற்றும் விதமாக அச்சம் தவிர் தேஜஸ் 2025 எனும் மகாகவி பாரதி மண்டல சந்திப்பு நிகழ்ச்சி சுந்தராபுரம் லிண்டஸ் கார்டன் அரங்கில் நடைபெற்றது..

பாரதி மண்டல தலைவர் லயன் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடத்துனர் குழுத் தலைவர் திருப்பூர் கிரேட்டர் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயகாந்தன் அவர்கள் மற்றும் பதிவுக் குழுத் தலைவர் நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் கவிஞர் கனலி என்கிற சுப்பு செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் முதன்மை விருந்தினர்களாக மாவட்ட ஆளுனர் நித்யானந்தம், ஃபேரா தேசிய தலைவர் ஹென்றி,தேசிய பொது செயலாளர் நேரு நகர் நந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுரவ அழைப்பாளர்களாக மகாகவி பாரதியாரின் கொள்ளு பேத்திகள் மற்றும் பேரன் கவிஞர் உமா பாரதி, ஸ்ரீ பிரியா பாரதி, சிவகுமார் பாரதி,மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் மருத்துவர் பழனிசாமி,சாரதாமணிபழனிசாமி,ஜீவானந்தம், கருணாநிதி,.மற்றும் சி.எஸ்.ஆர்.ரீஜினல் ஹெட் ராம் குமார்,நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் சேவைத் திட்டங்களைஆளுனர் (தேர்வு) ராஜசேகர், முதலாம் துணை ஆளுனர் (தேர்வு) செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்..

வட்டார தலைவர்கள் மோகன் ராஜ்,ஸ்ரீதர்,திவாகர்,வெங்கடேஷ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.விழாவில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதனை மகளிரை கவுரவிக்கும் விதமாக பாரதி கண்ட புதுமை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.மேலும் சமூக பணிகளில் தங்களை அர்ப்பணித்து செயல் பட்டு வருபவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது,சிறந்த பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்பதினெட்டு சங்கங்களின் சேவைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top