உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில் மக்களிடையே மாஸ்டர் செக்கப் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது குறித்து ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில்,
வருடாந்திர முழு உடல் பரிசோதனை செய்ய மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தயக்கமும் உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவ்வாறு உடல் பரிசோதனை செய்து கொண்டால் நமக்கு நோய் உள்ளது என்று சொல்லிவிடுவார்களோ எனவும் நம்மிடம் நோய் இருக்கிறது எனவும் என்பதால் அதற்கான சிகிச்சை செலவு அதிகமாகும் என்று பயப்படுத்திவிடுவார்கள் என்பது போன்ற தேவையற்ற அச்சம் மக்களிடையே இன்று உள்ளது.இன்று பலரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கம் இருப்பது இல்லை. துரித உணவுகள் உண்பது, குறைந்த உடல் உழைப்பு, குறைந்த நேரமே தூங்குதல் இது போன்ற செயல்களால் 30 முதல் 45 வயதுக்கு உள்ளவர்களுக்கே இப்போதெல்லாம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றார்.நாளொன்றுக்கு முதல் 50 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும்.