சாமியார் வேடத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வேல் கோட்டம் மடத்தில் இருந்து வெள்ளி வேலை திருடிக்கொண்டு சென்று விட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய நிலையில் போலிசார் வலை வீசி தேடிதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.