பொள்ளாச்சி அருகே உள்ள
செங்குட்டை பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த 5ம்தேதி பூப்படைந்துள்ளார்.
இந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் , பள்ளிக்கு சென்ற மாணவியை தீட்டாக கருதி பள்ளி அறையின் வெளியே தனியாக படியில் அமர வைத்து 7ம் தேதி அறிவியல் தேர்வு,9ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை பள்ளி நிர்வாகம் எழுத வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் தனியாக தேர்வை எழுதிய மகளை கண்டு தனது தாய் பதறி துடித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு அப்படி தான் நடக்கும்
நீங்கள் வேண்டுமென்றால் வேனுமின்னா வேறு பள்ளியில் சேர்த்துக்கொள் எனக் கூறியதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பேட்டி-தம்பு(பாதிக்கபட்ட மாணவியின் தாத்தா)