வேலூர்:மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!!!
April 27, 2025
0
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) ஆர்.ஈ.சி. லிமிடெட் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக REC Limited Independent Director இயக்குனர் நாராயண திருப்பதி, திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம்.கதிர் ஆனந்த், வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினர். இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், வேலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன், இயக்குனர் எஸ்.சரவணன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், திமுக பகுதி செயலாளர் சுந்தர்விஜி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மாற்றுத் திறனாளிகள், திமுக நிர்வாகிகள் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.