இந்நிலையில் நேற்று (26.4.2025) சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்ரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகினர். இதனையொட்டி நேற்று இக்கோவிலில் யாகம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பது சான்றோர் வாக்கு.
தென்காசி யானைபாலம் அருகே உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோவிலில் ராகு,கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது!!!
April 27, 2025
0
குற்றாலம் அமைந்துள்ள பொதிகை மலையில் உருவாகி இப்பகுதிகளை பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ள ஜீவநதியான சித்ரா நதிகரையில் தென்காசி யானை பாலம் அருகே அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரநயினார் திருக்கோயில் 500 ஆண்டுகால பழமையான கோவிலாகும். இதிகாச, புராண சிறப்புமிக்க இக்கோயில் தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாக தோஷ பரிகார ஸ்தலமாகும்.