இந்நிலையில் ஒட்டன்சத்திரம் ரயில்வேல் நிலையத்தில் அமைக்கப்பட்ட பொதுகழிப்பிடம் பணிகள் அனைத்தும் முடிந்தும் பல ஆண்டுகளாகியும் இன்றும் வரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும் ரயில்நிலையத்தில் வேறு கழிப்பறை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் அங்கிருந்து பேருந்து நிலையம் வந்து, அங்குள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சில பயணிகள் ரயில்நிலையம் வந்ததும் கழிவறையை தேடி அலைமோதுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள பொதுமக்கழிப்பறையை சுற்றி முட்புதர்கள் படர்ந்துள்ளதால் சமூகவிரோதிகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் வருகின்றனர்.எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி ஒட்டன்சத்திரம் ரயில்நிலையத்தில் அமைந்துள்ள பொதுக்கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையத்தில் பூட்டிய நிலையிலேயே இருக்கும் பொதுக் கழிப்பிடம் பயணிகள் அவதி!!!
April 09, 2025
0
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரச்சித்தி பெற்ற காய்கறி மார்க்கெட், தயிர் மார்க்கெட் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தினமும் ஏராளமானோர் ஒட்டன்சத்திரம் நகருக்கு ரயில்களிலும், பேருந்துகளிலும் வந்து செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் கேரளா, பழனி, திருச்செந்தூர், சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் ரயில் மார்க்கத்தில் காந்திமார்க்கெட்டிலிருந்து காய்கறிகள் மற்றும் தயிர், நெய், வெண்ணை ஆகியவைகளை ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கு அதிக பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் ஒட்டன்சத்திரம் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.