அக்கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் நாட்டில் தேச ஒற்றுமை நீடித்த அமைதி நாட்டின் அரசியலமைப்பு ஆகியவை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு இந்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.
கோவை:வக்பு திருத்த சட்ட மசோதா விவகாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!!
April 09, 2025
0
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட CPI குழு சார்பில் உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.