ஊட்டியில் புதிய மருத்துவ கல்லூரி திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டத்தை மேலும் மெருகேற்றும் விதமாக கீழ் காணும் ஆறு திட்டத்தை அறிவித்தார்
1.சொந்தமாக வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு ரூ 26கோடியே 6 லட்சம்செலவில் கூடலூரில் புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்.
2. பழங்குடியினர் மக்களின் வாழ்வை அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தவும் , அதனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ரூ 10கோடியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
3. நீலகிரி மாவட்டம் முழுவதுமாக பரவியிருக்கும் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்து மகிழ "எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்" எனும் ஹாப் ஆன் ஹாப் ஹாப் "சுற்றுலா முறை ரூ 5கோடிசெலவில் 10புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்.
4. சுற்றுலா காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க "மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ 20கோடி செலவில் அமைக்கப்படும்.
5. நடுகாணி மரபணுத் தொகுதி சூழலியல் இயற்கை சுற்றுலா மையம் ரூ 3 கோடிசெலவில் மேம்படுத்தப்படும்.
6. பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் ரூ 5கோடியே 75லட்சம் செலவில் 23சமுதாய கூடங்களும் (திருமண மண்டபம்) நகர்புறங்களில் வாழும் பழங்குடியினருக்கு ரூ 10கோடியில் 200வீடுகளும் கட்டித் தரப்படும் என புதிய திட்டத்தை அறிவித்தார்.