மே 13 ந்தேதி நடைபெற உள்ள கல்வி கண்காட்சியில் உடனடி அட்மிஷன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பல்கலைகழகஅதிகாரிகள்தெரிவித்துள்ளது.இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு உலக அளவில் ரஷ்யா முதன்மையான தேர்வாக உள்ளது.ரஷ்யா சென்று மருத்துவம் பயில்வதற்கு தற்போது அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,கோவையில் ரஷ்யா கல்வி கண்காட்சி வரும் மே 13 ந்தேதி நடைபெற உள்ளது.இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், மாஸ்கோவில் உள்ள தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எலீனா , ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abroad Educational Consultants) நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு ஆகியோர் பேசினர்..,
கோவையில் நடைபெற உள்ள ரஷ்ய கல்வி கண்காட்சியில், ரஷ்யாவை சேர்ந்த பல்வேறு மருத்துவ பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், மருத்துவ துறை தலைவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு, மருத்துவத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கவுரை தர உள்ளதாகவும்,இந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு, 10,000 மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்த கண்காட்சியில் என்ன படிக்கலாம், கல்விக் கட்டணம்,பாடங்கள்,உதவித்தொகை, தங்குமிடம்,பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவ பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டனர்.ரஷ்யா உக்ரைன் போர் காலங்கள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள இந்தியா பாகிஸ்தான் பதற்றம் போன்றவை குறித்து மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எந்த வித பயமும் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.