கோவை:தொழில் துறைக்கு தேவையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக சப்கான் கண்காட்சி வருகின்ற மே 14"ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது!!!

sen reporter
0

 கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொழில் துறைக்கு தேவையான உற்பத்தி பொருட்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்யும் நோக்கில் பொதுத்துறை நிறுவனங்கள்,ராணுவ தளவாட மற்றும் பெரும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை கண்காட்சி சப்கான் 2025 என்ற தலைப்பில் வருகின்றமே 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.இந்த கண்காட்சியில் 225-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 250-க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10,000-க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதில் தமிழ்நாடு,டெல்லிகேரளா,மகாராஷ்டிரா, பாண்டிச்சேரிடெல்லி,ஹரியானா,குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.கோவை பகுதியில் உள்ள 2 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைப்பது இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்று சப்கான் தலைவர் சஞ்சீவி குமார் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top