வ.உசி., ரைஸ்மில் தெரு, சின்ன ஓடையில் இரண்டு பக்கமும் தடுப்புச் சுவரும், மெயின்ரோடு ஓடையில் அரைகுறை தடுப்புச் சுவரையும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக ஒரு பெண் செவிலியர் நியமனம் செய்து சுகாதார நிலையத்தை காலை 8 மணி முதல் செயல்படுத்த நடவடிக்கைஎடு.தேவிபட்டணம் FE 019 ரேஷன் கடையில் அட்டை மற்றும் கை ரேகை பதியும் பழுதடைந்த மிஷினை மாற்றி புதிய மிஷின் வழங்கி அனைத்து பொருட்களும் ஒரே நாளில் வழங்க நடவடிக்கைஎடு.ஏழைகளின்வாழ்வாதாரமான நிறுத்தி வைத்துள்ள 100நாள் வேலையை வழங்கி, பல மாதங்களாக பாக்கியுள்ள சம்பள பணத்தை உடனே வழங்கு.வடக்குத்தியம்மன் கோவில், செங்குளம் வழியாக மேலக்காட்டிற்கு தார்சாலை அமைத்துக்கொடு அனைத்து மக்களுக்கும் பொதுவான மயான தகனமேடை அமைத்துக்கொடு,காவல்துறை அதிகாரிகள் தினசரி காலையும், மாலையும் மந்தையில் முகாமிட்டு சாராயம், கஞ்ச விற்பனை, குடி போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க நடிவடிக்கை எடு. உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து மஞ்சள் வேதனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அமல்ராஜ், வட்டார செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி சிறப்புரையாற்றினார்.பாக்கியம்,போத்தி,
ஒன்றியக்குழுஉறுப்பினர்கள்,தோழர்கள்,புஸ்பம், அமல்ராஜ், கண்ணன், ஜீவா, சிவசுப்பிரமணியன்,சக்திவேல், பூல்பாண்டியன், அமல்ராஜ், வெள்ளப்பாண்டி, கணேசன், க.சண்முகவேல் பேச்சியம்மாள், சொர்ணம், . தங்கம், ஆறுமுகம், கலைச்செல்வி,சக்திவேல்,எட்டம்மாள், பாக்கியலட்சுமி, K. முனியம்மாள்,. மரியசெல்வம், பா ஞ்சாலிராஜா,காளிராஜ், முனீஸ்வரி, முருகேஸ்வரி, இசக்கியம்மாள் மற்றும் தேவி பட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
