ஒன்றியஅரசேஅனைத்துவிவசாயிகளுக்கும் PM கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க வேண்டும். ஒன்றிய அரசே புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் தமிழக அரசே தரணி சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடு.தரணி நிர்வாகமே கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கித் தொகையை உடனே வழங்கிடு.தமிழக அரசே! காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கிடு.வனத்துறையே! வனவிலங்குகளை விளை நிலங்களுக்குள் புகாதவாறு தடுத்திடு.வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கிடு.3. மாவட்ட மருத்துவத் துறையே! சிவகிரி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை பணி அமர்த்திடு,குமாரபுரத்தில் உள்ள பழைய மருத்துவமனையை புதிய மகப்பேறு மருத்துவமனையாகஅமைத்திடு,வருவாய்த் துறையே பசுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றிடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாகண நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டம்:சிவகிரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 35 வது நகர மாநாட்டில் தீர்மானம நிறைவேற்றம்!!!
May 06, 2025
0
சிவகிரி விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மூத்த நிர்வாகிகள்அ. கருப்பையா, பி. அருணாசலம், க. சண்முகவடிவு தலைமை வகித்தனர்.கொடியை ஆசிரியர் நடராஜன் ஏற்றினார். மாவட்டதுணைச்செயலாளர் எஸ். வேலாயுதம் தொடக்க உரை ஆற்றினார் நகரச் செயலாளர் பி. பாலசுப்பிரமணியன் வேலை அறிக்கையினை முன்வைத்தார். துணைச் செயலாளர் க. குரு வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார். 27பேர் கொண்ட நகர குழு தேர்வு செய்யப்பட்டது. நகரச் செயலாளராக பி.பாலசுப்பிரமணியன், துணைச்செயலாளராக குரு,பி.அருணாசலம், பொருளாளராக வி. ராஜேந்திரன்தேர்வு செய்யப்பட்டனர். சிபிஐ மாவட்ட செயலாளர் த. இசக்கித்துரை சிறப்புரையாற்றினார். லெட்சுமணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.