வாசுதேவநல்லூர் வட்டாரம் புளியங்குடிநகரகிளைகளின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது வாசுதேவநல்லூர் யூனியன் திருமண மண்டபத்தில் வைத்துபணிநிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா.இயக்க உறவுகள் கூடுகை விழா. ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வட்டாரத் தலைவர் ம.இராமர் புளியங்குடி நகர கிளையின் தலைவர் P.சோமசுந்தர பாரதி, ஆகியோர் தலைமை தாங்கினார்கள் முன்னாள் வட்டார செயலாளர் மு.சபாபதி மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.வெண்மதிமாவட்டத் துணைத் தலைவர் V.சிவஞானபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் புளியங்குடி நகர செயலாளர் C.தங்கமாரியப்பன் வரவேற்றனர் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் S.செய்யது இப்ராஹிம் மூசா நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் வட்டார கல்வி அலுவலர்கள்R.மாரியப்பன். V.இராமச்சந்திரன். S.B.சுபாஸ்ரீ வட்டார
வட்டார பொருளாளர் S.அந்தோணிச்சாமி சிவகிரி இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்P.செல்வராஜனR.முரளிதரன் ஆசிரியர்.M.நேன்சி பொன்னீஸ்வரி J.விமலா மாணிக்கசெல்வி,புலவர்வை.ஆறுமுகம்,முன்னாள் வட்டார செயலாளர் மருதுபாண்டியன் புளியங்குடி முன்னாள் நகர செயலாளர் S.கோபிகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.Dr.இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள புளியங்குடி பரமானந்தா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை S.செல்வசுகுணா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புளியங்குடி நகர பொருளாளர் ரஜப்நிஸா நன்றி கூறினார்.
