பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈசுவரன் : கட்டாயம் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு ஏழை எளிய மாணவர்களுக்கு பலன் அடைந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இதுவரை இணையதள சேர்க்கையை தூங்கவில்லை என்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முறியடிக்கும் வேவையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் இணையதளம் சேர்க்கையை தொடங்க வேண்டும் ஆனால் மே மாதம் ஆகியும் தற்பொழுது வரை தொடங்கவில்லை என்றும் இது குறித்து தமிழக அரசு,பள்ளிக்கல்வி துறை அமைச்சர்,பள்ளி கல்லூரி செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான பதிலளிக்காதது வெட்கக்கேடாக உள்ளது.அரசுப் பள்ளியில் எல்கேஜி இல்லை சட்டத்தில் சிறப்பாக அமல்படுத்த தமிழக அரசு ஏன் யோசிக்கிறது என்றும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள் ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு முன்வந்து பள்ளி மாணவர்களின் நலன் கருதி சொந்த நிதி அளித்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர் பிள்ளைகள் பெரிய பெரிய பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள்.ஆனால் ஏழை எளிய மாணவர்கள்,தூய்மை பணியாளர் குழந்தைகள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஆண்டுக்கு 8 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதி 7 லட்சம் பேர் தேர்வாகி வருகின்றது.ஆனால் அவர்கள் ஒவ்வொரு மாணவர்களும் 10 முதல் 15 கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டு தேடி அலைகிறார்கள்.அதற்கு தீர்வாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர (Single Window Systems) முறையை கொண்டு வர வேண்டும் கூறினார்.
