நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தென்காசி மாவட்டத்திற்கு தனி இணை ஆணையர் (ஜாயிண்ட் கமிஷனர்) அலுவலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இன்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப். மீனாட்சிபுரத்தில் இயங்கி வருகிற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடவசதி இல்லை பள்ளி மாணவ மாணவியர்கள் மரத்தடியிலும் ஆய்வக அலுவலகத்திலும் வராண்டாவிலும் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே திப்பனம்பட்டியில் திருமலை குமாரசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் 4.5 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் குத்தகை நீண்ட நாள் செலுத்தப்படாமல் இருக்கிற நிலத்தை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நீண்ட நாள் குத்தகையின் பேரில் வழங்க கேட்டு மனு வழங்கியிருந்தார்.அந்த மனு தற்போது விசாரிக்கப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உகந்த இடம் குத்தகைதாரர்கள் யாரும் இல்லை தனிநபர் பயன்பாட்டிலும் இல்லை கோவில் நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது எனவே வழங்கலாம் என்று அரசுக்கும் அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது விரைவில் அந்த பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம் கட்ட அறநிலைத்துறை இடத்தை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை மனுவை நினைவுபடுத்தினோம் ..
மேலும்தோரணமலை முருகன் கோவில் கிரிவலப் பாதையை சீரமைத்து சாலை அமைத்துக் கொடுக்க ரூபாய் 2.5 கோடி நிதி ஒதுக்கியதற்கு அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது அமைச்சர் அவர்கள் இன்னும் மூன்று மாத காலத்தில் தென்காசியில் இணை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் அதற்குரிய வேலைகள் நடந்து வருவதாக சொன்னார்கள் அதற்கும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்வின் போது மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம் துரை ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன் லால் முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
