வேலூர் மாவட்டம்:பேரணாம்பட்டில் திருடு போகும் மாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
7/02/2025
0
பேரணாம்பட்டு நகரத்தில்மாடுகளும், ஆடுகளும் திருடு போவது தொடர்கதை ஆகி வருகிறது பேரணாம்பட்டைச் சேர்ந்த ஒரு சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது .இது குறித்து ஒரு சிலர் மீது பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் .திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டைச் சேர்ந்த பிலால் அஹமத் என்பவருக்குச் சொந்தமான ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள சினையாக இருந்த பசுமாடு திருடு போனது. இந்நிலையில் மாட்டை காணாமல் அதன் உரிமையாளர் பிலால் அஹமத் மிகவும் வருத்தத்தில் உள்ளார். அவர் மாட்டை காணாமல் பரிதவித்து நிற்கிறார். இவரது வருத்தமும், வேதனையும் இவருக்குச் சொந்தமான பசுமாட்டை திருடி விற்றவர் மீதே உள்ளது. இவர் எப்படி நிலைகுலைந்து போய் நிற்கிறாரோ அதேபோல இவரின் மாட்டை திருடிய குடும்பமும் இறைவனால் நிர்மூலம் ஆக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் மாடு திருட வருபவர்கள் மாடு கிடைக்காவிட்டால் டூவீலர்களை திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே பேரணாம்பட்டு போலீஸார் இதில் தனிக்கவனம் செலுத்தி மாடுகள் காணாமல் போவது குறித்தும், அதை திருடிச் சென்றவர்கள் மீது பேரணாம்பட்டு போலீஸார் தீவிர விசாரணை செய்து மாடு திருடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துமாட்டின்உரிமையாளர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதேமாட்டைபறிகொடுத்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இதுகுறித்து பிலால் அஹமத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது பேரணாம்பட்டு நியூ டவுன் புதிய பேருந்து நிலையம் அருகில் எனது சொந்த இடத்தில் என்னுடைய பசு மாட்டை கட்டி வைத்திருந்தேன். கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய மாட்டை காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த இடத்திலும் அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வருகின்றனர் .இதேபோல் அப்பகுதியில் மாடுகள் மற்றும் ஆடுகள் காணாமல் போவது வழக்கமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் கால்நடைகள் திருட்டு போவதை தடுப்பதற்கு இது போன்ற கால்நடைகளை திருடிச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
