ஈரோடு:குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் இருவரை கைது செய்த போலீசார்!!!
9/01/2025
0
குழந்தையை சில லட்சம் கொடுத்து வாங்கி வந்து, குழந்தை இல்லாத தம்பதியினரிடம் பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்த நிலையில்,போலீசார் இருவரை கைது செய்தனர.9 மாத குழந்தையை பெற்றோரிடம்இருந்துரூ.2.70லட்சத்திற்குவாங்கிவந்துவேறொருவரிடம் விற்க முயன்றஇரண்டுபெண்களைபோலீசார் கைதுசெய்துசிறையில்அடைத்தனர். ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல மைய மேற்பார்வையாளர் புவனேஸ்வரிக்கு பவானியில் உள்ள பழனிபுரம் பகுதியில்சட்டவிரோதமாககுழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் புவனேஸ்வரி இது குறித்து பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்தபவானிபோலீசார் பழனிப்புரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, நேற்று பழனிப்புரம் 3-வது வீதியில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டின் முன் இரண்டு பெண்கள் 9 மாத பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டுசந்தேகத்திற்கிடமானவகையில்நின்றுகொண்டிருந்தனர்.இதைபார்த்தபோலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இருவரும் பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜானகி (47), செல்வி (37) என்பது தெரிய வந்தது. மேலும், அந்த குழந்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு முன் ரூ.2.70 லட்சத்திற்கு இவர்கள்வாங்கிவந்ததுவிசாரணையில் தெரிய வந்தது. மேலும்,கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் குழந்தையை பராமரித்து வந்த நிலையில் தற்போது வேறு ஒருவருக்கு குழந்தையைவிற்க முயன்றதும்தெரியவந்தது.இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் யார்? இவர்கள்இதுவரைஎத்தனைகுழந்தைகளை இது போல் விற்றுள்ளனர்? யாரிடம் இந்த குழந்தையை விற்க இருந்தனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து பழனிபுரம் பகுதியில் போலீசார் குழந்தை விற்பனை தொடர்பாக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் குழந்தைகளை கடத்தி செல்பவர்கள் குறித்து தகவல் அறியும்பட்சத்தில் பொதுமக்கள் குழந்தைகள் நல மையத்தின் செல்போன் எண் 1098-ஐ தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
