விழுப்புரம்:பாமகவில் இருந்து நீக்கப்படுவாரா அன்புமணி? நாளை மறுநாள் அறிவிக்கிறார் ராமதாஸ்!!!!
9/01/2025
0
ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதிக்கு பாமக செயல்தலைவர்பதவிவழங்கவாய்ப்புள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா?அவருக்குவழங்கப்பட்ட செயல் தலைவர் பதவி பறிக்கப்படுமா? என்பது குறித்து அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாளை மறுநாள் அறிவிப்பார்எனதெரிவிக்கப்பட்டுள்ளதுபாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையிலான மோதல் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இருவரும் தனித்தனியே பொதுக்குழுவைகூட்டி,நானேதலைவர்'எனதீர்மானம்நிறைவேற்றினர். தொடர்ந்து, இருவருமே எதிர்தரப்பு ஆதரவாளர்களை நீக்கி விட்டு, தங்கள் தரப்பு ஆதரவாளர்களை பதவியில் நியமித்தும் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் கூடிய பாமக பொதுக் குழுவில், 'கட்சி நிறுவனர் ராமதாஸை எதிர்த்துப் பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, சமூக வலைத்தளங்களில் ராமதாஸை அவதூறாக சித்தரித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது' என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கக் கோரி, அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. நேற்றுடன் (ஆக.31) காலக்கெடு முடிந்த நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்றுதைலாபுரத்தில்நடைபெற்றது. அதில்,அன்புமணியைபாமகவிலிருந்து நீக்குவதா? அல்லது அவருக்கு வழங்கிய செயல் தலைவர் பதவியை பறிப்பதா? என்பது குறித்தும் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக,அன்புமணி தொடர்பான ஒழுங்குநடவடிக்கைக்குழுவின்பரிந்துரைசீலிடப்பட்டகவரில்ராமதாஸிடம் வழங்கப்பட்டது.ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்குப் பின் பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினருமான அருள் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது அவர்,பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. தொடர்ந்து கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பின் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.மகன் அன்புமணியுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், தன் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை பாமக நிர்வாகக்குழு உறுப்பினராக ராமதாஸ் ஏற்கனவே நியமித்துள்ளார். எனவே, கட்சியிலிருந்துஅன்புமணிநீக்கப்பட்டால்,ஸ்ரீகாந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
