திருநெல்வேலி:பாம்பு வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட கவுதாரி குஞ்சுகள் நெல்லையில் ஆச்சர்யம்!!!

sen reporter
0

நெல்லையில் பாம்பு வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட முட்டைகளில் இருந்து கவுதாரி குஞ்சுகள் பொறித்துள்ளது ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது. திருநெல்லையில் பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கவுதாரி குஞ்சுகளை, வன மருத்துவர்கள் 11 நாட்கள் இன்குபேட்டரில் வைத்து பாதுகாப்பாக மீட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விஜயலட்சுமி என்பவரின் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக கடந்த 27 ஆம் தேதி வனத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வன சரக அலுவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டனர்.அந்த சமயத்தில், பாம்பின் வயிற்றில் இருந்து ஏழு முட்டைகள் வெளியேறியது. இதனால்பாம்புடன் சேர்த்து 7 முட்டைகளையும்மீட்டவனத்துறையினர், அவற்றை நெல்லை மாவட்ட வன கால்நடை அலுவலர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், இந்த முட்டைகளை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் இது பாம்பு முட்டை இல்லை என்பதைஉறுதிசெய்தனர்.

இதையடுத்து, அவை என்ன முட்டை என கண்டறிவதற்காக, அவற்றை பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த முட்டைகளில் இருந்து இன்று (ஆகஸ்ட் 7) குஞ்சுகள் வெளியேறின. அவற்றை பார்த்த அதிகாரிகள், அவை கவுதாரி குஞ்சுகள்எனஉறுதிசெய்தனர். இதுகுறித்து வன கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், கவுதாரி குஞ்சு முட்டைகளை பாம்பு விழுங்கி இருக்கலாம். விழுங்கிய சிறிய நேரத்தில் முட்டைகளை பாம்பு வெளியேற்றியதால், முட்டைகள் வெப்பத்தால் பாதிக்கப்படாமலும், உட்புற வளர்ச்சி பாதிக்கப்படாமலும் ஒரு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டதால் அவற்றை காப்பாற்ற முடிந்தது. பொதுவாக, கௌதாரிகள் 6 முதல் 14 முட்டைகள் வரை இடும். அவற்றை சுமார் 18 முதல் 21 நாட்கள் வரை அடைகாக்கும். அதன்படி, பார்த்தால் கவுதாரி குஞ்சு முட்டைகளை, தாய் கௌதாரி ஏற்கனவே 11 நாட்கள் அடை காத்திருக்கும். இதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் குஞ்சுகள் தற்போது வெளியேறியது என தெரிவித்தனர். பாம்பு வயிற்றில் இருந்து வெளியேற்றிய கவுதாரி குஞ்சுகளை பாதுகாப்பாக பொரிக்க வைத்த வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top