நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது விவசாயிகள்மத்தியில்பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது தீவிர நெல் அறுவடை செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென்று நேற்று மாலையில் இருந்து பெய்துவரும் கனமழையால் நாச்சியார்கோவில், திருப்பந்துறை, திருநறையூர் போன்ற பல்வேறு கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய வைத்துள்ள நூற்றுக்கணக்கான மூட்டை நெல்மணிகள் மழைநீரால் சூழப்பட்டு, நனைந்து சேதமாகி வருகின்றன. விவசாயிகள் தங்களது நெல்லை மூட்டைகளை பாதுகாக்க, தேங்கியுள்ள மழைநீரை பிளாஸ்டிக் கூடைகளை கொண்டும் தண்ணீரை வாரியும், இறைத்தும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.எனவே, உடனடியாக ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழைநீரில் நெல்மணிகள் நனைந்து சேதமாவதை தடுக்கும் வகையில் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசிற்குகோரிக்கைவிடுத்துள்ளனர். அதேபோல், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் உரிய கிடங்கிற்கோ, அரவை ஆலைக்கோ அனுப்புவதில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மெத்தனமாக செயல்படுவதால், நெல் மூட்டைகள் தேக்கமடைந்து அவையும் மழையில் நனைந்து அரசிற்கும் மற்றொரு புறம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கும்பகோணம்:கனமழையால் நெல் மூட்டைகள் சேதம் விவசாயிகள் கோரிக்கை!!!
8/11/2025
0
