மேலும், ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகையை நிர்ணயித்ததால், மாதத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பை சந்தித்தோம். அதனால், குத்தகை காலத்தை நீட்டிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எந்த ஒப்பந்தமும் செய்யாமல் கட்டடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே, காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தை உடனடியாக காலி செய்து, நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த அவர், கட்டடத்துக்கான வாடகையை பொதுப்பணித் துறை நிர்ணயித்த 6 லட்சம் ரூபாயில் இருந்து, 13 லட்சம் ரூபாயாகஅதிகரித்துஉத்தரவிட்டார். அது மட்டுமின்றி, இந்த கூடுதல் தொகை நிர்ணயத்தின்படி வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து தர வேண்டிய ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரண்டு ஆண்டுகளில், காவல் ஆணையர் அலுவலகத்தை சம்பந்தப்பட்ட கட்டடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சென்னை:தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய கெடுநீதிமன்றம் அதிரடி!!!
8/11/2025
0
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டடத்துக்கான வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து, ரூ.13 லட்சமாக அதிகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில், காலி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து, கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி,அந்தஇடத்தின்உரிமையாளர்களான கோட்டூர்புரத்தை சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சௌத்ரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில், ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வாடகையை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக மறுநிர்ணயம் செய்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக, கூறப்பட்டுள்ளது.
