தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "நான் எம்.பி-யாக பொறுப்பேற்ற இந்த 13 மாதங்களில் நாடாளுமன்றத்தில் வைத்த முதல் கோரிக்கை திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை அமைப்பது குறித்துதான். நான் சிறு குழந்தையாக இருந்தபோதில் இருந்து இந்த கோரிக்கையானது வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகிறார்கள் என கூறினேன். அதன்படி தற்போது திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை அமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக சர்வே செய்வதற்காக ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீடுஅனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், தேனியில் இருந்து மதுரைக்குச் செல்ல ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகள் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலை கடந்த செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை சமாளிக்கும் விதத்தில் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் புறவழிச்சாலையை இணைக்க ரூ.1600 கோடிக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.மூன்றவதாக தேனி மாவட்டம் தேவாரம் முதல் சாக்குலத்து மெட்டு வரை மலைப்பாதைகளில் சாலை அமைக்க நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டேன். இதுகுறித்து தமிழக வனத்துறை மற்றும் மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், கோரிக்கை மறுக்கப்பட்டது. அதுகுறித்து வனத்துறையிடம் கேட்டபோது, வனவிலங்குகள் இருப்பதால் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் மாற்று ஏற்பாடாக ரூ.400 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன். விரைவில் அவை குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளேன். ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களையும் நிறைவேற்றி தருவது எனது பொறுப்பு என்றார்.
திண்டுக்கல் டூ சபரிமலை ரயில் பாதை தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சொன்ன தகவல்!!!
8/10/2025
0
திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, முதல் கட்டமாக ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூக சேவைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருந்து வழங்கினார்.
