வேலூரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!!!
9/25/2025
0
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தாமதம் மழைநீர் வடிகால் சீர்கேடு - பொதுமக்கள் அவதி - சுகாதார சீர்கேடு -போர்க்கால அடிப்படையில் சரி செய்யக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு (எ) ராதாகிருஷ்ணன் வேலூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாநகராட்சி முழுவதும் கால்வாய்கள் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டுமென வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு மாநகராட்சி ஆணையர் லஷ்மணனிடம் மனு அளித்தார்.
