சென்னை:ஒழுகும் வீடு குறித்த கவலை இனி வேண்டாம் மாணவிக்கு வீடு பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!
9/26/2025
0
மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டித் தருவதற்கானஆணையைமுதலமைச்சர் வழங்கியுள்ளார்.புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டித் தருவதற்கானஆணையைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கியுள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்து வரும் சாதனைகள், சிறப்புகள் குறித்த நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவி பிரேமா மேடையில் பேசும்போது, “எங்கள் வீடு மழை பெய்தால் ஒழுக்கிக்கொண்டே இருக்கும். நான் கல்லூரியில் உள்ள விடுதியில் படித்து வருகிறேன். அங்கு மழை பெய்தால் ஒழுகாமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், நான் அந்த சமயத்தில் எனது வீட்டைப்பற்றி மட்டுமேசிந்தித்துகொண்டிருப்பேன். வீடுஇப்போதுஒழுகிக்கொண்டிருக்குமே. அம்மா அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்ற சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். எப்படியாவது எங்க அம்மா அப்பாவிற்கு நல்ல வீடு கட்டி கொடுத்தடனும். அதுதான் என் ஆசை” என கண்ணீர் மல்க பேசினார். தொடர்ந்து, தனது முதல் மாத சம்பளத்தை, தனது தந்தையை மேடைக்கு வரவழைத்து அவரிடம் கொடுத்து பெருமைப்படுத்தினார்.
