கோவையில் ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்!!!
9/26/2025
0
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உள்ளார்.உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்துவிட்டதாகதெரிவித்துஉள்ளனர்.இதுகுறித்துசிங்காநல்லூர்போலீசார் வழக்குபதிவுசெய்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
