தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார், “4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 யுபிஎஸ்களின் பேட்டரிகள் திருடு போனதாக” மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதரங்களை ஆராய்ந்த போலீசார் 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மோகன், சுந்தர், வீரமணி ஆகிய மூன்று பேர் தான் பேட்டரிகளை திருடியதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 27 யுபிஎஸ் பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யுபிஎஸ் பேட்டரிகள் காணாமல் போன போது மின்திடை ஏற்பட்டதாகவும், அதனால் மகப்பேறு பிரிவில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அவதிக்குள்ளானதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இதுகுறித்து இன்று விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அவர், “பேட்டரிகள் காணாமல் போனதால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரப்பிரிவு இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 24 நேரத்தில் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று பேரும் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.
