
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம், மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20ம் தேதி நடத்தியது.இந்த மாநாட்டில் 7ஆய்வு கட்டுரைகளும் ,வேலூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவ, மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதுநிலை பிரிவில் ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் கே.தீபா, டி.சங்கரி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் எஸ்.தினேஷ், பி.தீரஜ், பேர்ணாம்பட்டு நுசரத்துல் இஸ்லாம் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆலியா நுசுபா பர்தாஸ், சி.நசிகாஆதீன், வேலூர் சாய்நாதபுரம் என்.கே.எம். அரசு நிதிஉதவி மேல்நிலைப் பள்ளியின் எஸ்.பி.ஆகாஷ், ஆர்.ஆதவன், ஆகிய 8 பேரும் , இளநிலை பிரிவில் வேலூர் தோட்டப்பாளையம் மாநகராட்சி எட்டியம்மன் நடுநிலைப் பள்ளியின் எம்.திஷிகா, எம்.இசந்திகா, வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியின் எச்.தினேஷ், ஆர்.சித்தேஷ், பேர்ணாம்பட்டு நுசரத்துல் இஸ்லாம் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் டி.எ.சனாஷர்மயின், கே.எம்.மலிஹா ஆகிய 6 பேரும் ஆக மொத்தம் 14 மாணவ, மாணவிகள் இளம் விஞ்ஞானிகளாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பே.அமுதா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.தாரகேஸ்வரி முன்னிலை வகித்து பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்களின் வாழ்த்துக்களுடன் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) பெ.செந்தில்குமார் தொடங்கி வைத்தும் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க வந்த மாணவர்களை பாராட்டியும் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர்கள் கே.விஸ்வநாதன், ஆர்.காயத்ரி, துளிர் வினாடி வினா ஒருங்கிணைப்பாளர் முத்து.சிலுப்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ப.ராஜேந்திரன், இணை செயலாளர்கள் எ.பாஸ்கரன், என்.கோட்டீஸ்வரி, பி.ரவீந்திரன், காட்பாடி ஒன்றிய கிளையின் தலைவர் ஆர்.சுதாகர், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு, எஸ்.ராமு, கனிமொழி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் அறிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன், சமர்பித்து பேசினார். இவ்வாண்டிற்கான மையக்கருத்து நீடித்த நிலையான நீர் மேலாண்மை (நீர் கல்வி) இக் கருத்தை சார்ந்த உப தலைப்புகளில் பள்ளிக் குழந்தைகள் வழிகாட்டி ஆசிரியரின் மேற்பார்வையில் ஆய்வுகளை மேற்கொண்டு மாவட்டம் முழுமையாக 56 ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. 120 மாணவ மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். டி.கே.எம் மகளிர் கல்லூரி பேராசிரியை என்.ஜபீனாபேகம், அகீம் கல்லூரி பேராசிரியர் எ.யுபைதுல் பைக், ஆக்ஸிலியம் கல்லூரி பேராசிரியர் எஸ்.திவ்யா, திருவண்ணாமலை சண்முக தொழிற்சாலை கல்லூரி பேராசிரியர் எ.தினேஷ்கார்த்திக், ஊரிசு கல்லூரி பேராசிரியர் எம்.ஜாப் கோபிநாத், டாக்டர் எம்.ஜி.ஆர்.சொக்கலிங்கம் கல்லூரி பேராசிரியர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு செய்து மண்டல போட்டிக்கு 7 கட்டுரைகளையும் அதனை சமர்பித்த 14 இளம் விஞ்ஞானிகளையும் தேந்தெடுத்தனர். இளநிலை பிரிவு (6முதல் 8ஆம் வகுப்பு)
1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டியம்மன் கோயில் தெரு, தோட்டப்பாளையம், வேலூர்
2.பேர்ணாம்பட்டு நுஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி
3.சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பிரிவு (9 முதல் 12ஆம் வகுப்பு)
1.ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
2.காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
3.வேலூர் என்கேஎம் சாய்நாதபுரம் அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி
4.பேர்ணாம்பட்டு நுஸ்ரத்துல்இஸ்லாம்மேல்நிலைப்பள்ளிமண்டல அளவில் வடக்கு மண்டல அறிவியல் மாநாடு 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை இராணிப்பேட்டை மாவட்டம் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.முடிவில் காட்பாடி கிளையின் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.