வேலூர்:ஆம்பூர் பச்சகுப்பம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மத்திய மாநில குழுவினர் ஆய்வு!!!

sen reporter
0

 தமிழகத்தின் இரண்டாவது சர்க்கரை ஆலை என்று போற்றப்படும் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆம்பூர் பச்ச குப்பம் சர்க்கரை ஆலை. இதை மீண்டும் திறக்கச் சொல்லி கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலை தொழிலாளர்களும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர் . இந்நிலையில் ஆம்பூர் பச்சகுப்பம் சர்க்கரை ஆலையை மத்திய குழு அதன் தலைவர். தாவ்லே தலைமையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளர் ராஜா முன்னிலையில் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .பிறகு குழுவினர் சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தனர் . அப்போது மத்திய குழுவிடம் மீண்டும் சர்க்கரை ஆலையை திறந்து விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பாதுகாக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். இதில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கே. சாமிநாதன், சி. ஐ .டி. யூ.,மாவட்டகுழுஉறுப்பினர்ஆர்.மணிமாறன், ஆம்பூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் ராஜ்குமார், ஏ.ஐ.கே.எஸ். மாவட்ட குழு உறுப்பினர்கள் பேர்ணாம்பட்டு நா.சே. தலித். பாஸ்கர், வாணியம்பாடி கே. அர்ஜுன், ஆம்பூர் பொறுப்பாளர் இளங்கோ மற்றும் சத்யராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top