தென்சென்னை மாவட்டச் செயலாளர் வ.அம்பிகா, துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, முன்னாள் மாநிலச் செயலாளர் முத்து சிலுப்பன், கே.விசுவநாதன், என்.கோட்டீஸ்வரி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் க.பழனிவேல், மாநிலக் கருத்தாளர் நல்லாசிரியர் முனைவர் க.வே. கிருபானந்தம், மாவட்டப் பொருளாளர் ஜே. ஶ்ரீதர் ஆகியோர் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கினை ஒருங்கிணைத்தனர். இந்த மாநாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 88 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் 100 வழிகாட்டி ஆசிரியர்களுடன் நீடித்த நிலைத்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். டிசம்பர் 5,6 தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மண்டல அளவிலான மாநாட்டிலிருந்து 28 ஆய்வறிக்கைகள் 56 இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி. ஶ்ரீநிஓஃவாசன் இளம் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடல் நடத்தினார். அப்போது இளம் விஞ்ஞானிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.
மதிப்பீட்டாளகளாக சி அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரி பேராசியர்கள் வி.பாத்திமா தஸ்கின், பி.அன்பரசி, எல்.திவ்யா, பி. சௌம்யா, சோளிங்க அரசு கலைக்கல்லூரி கௌரவ பேராசியர் ஜி.காயத்ரி, எஸ்எஸ்எஸ் கல்லூரி பேரா. மணிமேகலை, ஏசிஎஸ் கல்லூரி பேரா. எஸ்.கோபிநாத், ஆசிரியர்கள் முனைவர் க.வே.கிருபானந்தம், பரிமளா காந்தி, ஆர்.ஸ்டெல்லா, ஏ.டி.காந்தி, எஸ்.தாளமுத்து நடராசன், ஏ.ரேகா, எஸ்.ராம்குமார், டி.ஆர். லட்சுமி ஆகியோர் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்து தேர்வு செய்தனர்.வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுக் கோப்பைகளை தி.க.கனகசபை, அக்னிச்சிறகுகள் இயக்கம் பா.தங்கராஜ், புலவர் செ.தமிழ்மணி ஆகியோரும் 300 பேருக்கான மதிய உணவினை புரவலர்கள் பொன்.கு.சரவணன், க.கணேசன் ஆகியோர் வழங்கினர்.நிர்வாகிகள் ந.வேல்குமார், கோ.துளசிராமன், இரா.ஆலீஸ் மேரி, பிரிட்டோ, கோ.தணிகேசன், பி.ஶ்ரீவித்யா, து,லட்சுமி, சி.ரஞ்சிதா, சு.தேவிஶ்ரீ, ஜி.நிவேதா, தே.வெங்கட்ராமன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
