வேலூர்:காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!!!!
11/16/2025
0
ஒகினோவா கொஸிகி கோஜிரியோ கராத்தே டூ சீடோ சகமோட்டோ ஸ்ரின்கான் இந்தியாசார்பில் கேஒய்யூ கிரேடிங் எக்ஸாமினேஷன் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கராத்தே பெல்ட்டுகள் வழங்கும் விழா நடந்தது.வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை பகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் பிளாக் பெல்ட் அமுதா. இவரிடம் பயிற்சி பெற்று பயிற்சியை முழுமையாக நிறைவு செய்த 20 மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் திடல் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் முற்பகல் 11 மணியளவில் நடந்தது. இந்த விழாவிற்கு சென்னை சேர்ந்த கராத்தே மாஸ்டர் எஸ்.கோபி தலைமை வகித்து பயிற்சியை முறையாக நிறைவு செய்த 20 மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காட்பாடி செங்குட்டை மாடு விடும் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் அச்சுதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் பிளாக் பெல்ட் அ.அமுதா செய்திருந்தார். கராத்தே பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு நிறைவு செய்து கராத்தே பெல்ட் பெற்ற மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாககலந்துகொண்டனர்.விழாவில்கலந்துகொண்டவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
