வேலூர்:காட்பாடியில் குழந்தைகள் தின விழா கோலாகல கொண்டாட்டம்!!!
11/17/2025
0
காட்பாடி சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், பாத் பைண்டர்ஸ் அறக்கட்டளை, முகமது அலி சிலம்ப கலைக்கூடம், காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கம் இணைந்து குழந்தைகள் தின விழாவை காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடியது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் எம்.திலகர் முன்னிலை வகித்தார். தலைவர் கே.சோகாராமன் வரவேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகளை காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தொடங்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகளை மொகசினா தொகுத்து வழங்கினார். காட்பாடி பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிருஷ்டி பள்ளி, முகமது அலி சிலம்ப கலைக்கூட மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.கலைநிகழ்ச்சிகளை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் பாத் பைண்டர்ஸ் நிறுவனர் ஆர்.சுதாகர், லயன் செயலாளர் டி.செல்வமணி, மாவட்ட செயலாளர் என்.தங்கவேல் பொருளாளர் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, ஆர்.ஜீவசெந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சையத் ஜாபர்சாதிக் நன்றி கூறினார்.
