வேலூர்:கே .வி. குப்பம் அபிராமி மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி!!!!
11/19/2025
0
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அபிராமி மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு தமிழ் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அறிஞர் வே. பொன்ராஜ் மற்றும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் பல தமிழ் அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் தனித்தன்மையை அனைவரும் விரிவாக விளக்கி கூறியது குறிப்பிடத்தக்கது.
