வேலூர் மாவட்டத்தினை கல்வியில் முன்னேற்றம் கொண்டுவர யூனிசெஃப், அறிவியல் இயக்கம் இணைந்து திட்டமிடல்!!!!
11/22/2025
0
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சியில் முன்னேற்றம் கொண்டு வர யூனிசெஃப் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து செயல்படுத்த திட்டமிடல் கலந்துரையாடல் கூட்டம் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அலுவலர் ஆர். பிரேமலதாவுடன் புதுதில்லியிலிருந்து வருகை புரிந்த யூனிசெஃப் நிறுவத்தின் கல்வி வல்லுநர் சாயம் மெஹம்மூத், தமிழகத்தின் சமூகக் கொள்கை வல்லுநர் முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் வானவில் மன்றத்தின் மாநில கருத்தாளர் முனைவர் என்.மாதவன், மேனாள் பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து முற்போக்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் குறித்த கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. குறிப்பாக அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து மாணவர்கள் தானே செய்து கற்றலை ஊக்குவிக்கும் திட்டமான வானவில் மன்றத்தை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.வேலூர் மாவட்டத்தின் தனித்தன்மைக்கேற்ப சில புதிய முயற்சிகளை எதிர்வரும் காலங்களில் திட்டமிட ஆலோசிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சியில் முன்னேற்றம் கொண்டு வர யூனிசெஃப் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.யூனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளை தேர்வு செய்து அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கணிதம் அறிவியல் பயிற்சி பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
