புதுச்சேரியில் அமைந்துள்ள பெனவோலண்ட் அமைப்பு சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும விருது வழங்கும் விழா!!!
11/22/2025
0
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் பெனவோலண்ட் அமைப்பு சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதற்கு உறுதுணையாக புதுச்சேரி தொகுதி எம். பி., வி. வைத்திலிங்கம் மற்றும் நேரு எம். எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய காலகட்டத்தில் அறிவியல், கல்வியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, மேலாண்மையில் மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை, புது யுக்திகளை கண்டறிந்து எப்படி பயன்படுத்துவது, அதைப்பற்றி விழிப்புணர்வு கூற வேண்டும் என்று பொருள் கூறினார்கள். இவ்விழாவில் முனைவர். சினேகா கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர் முனைவர். வெண்ணிலா ஸ்ரீ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவை சிறப்பித்த செந்தில், ராகுல், ஃபினிக்ஸ், சத்தியநாராயணன், ரகோத்தமன் மற்றும் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்த பெனவோலண்ட் அமைப்பு தலைவர் முனைவர் லோ. விஜயகுமாருக்கு விருது பெற்ற அனைவரும் நன்றி கூறினர். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெனவோலண்ட் அமைப்பு தலைவர் முனைவர் லோ.விஜயகுமார் செய்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
