தூத்துக்குடி:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு!!!
11/22/2025
0
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவர்களைக் கொண்டு தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.என்சிசி மாணவர்களுக்கு, 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் பங்கஜ் நாராயனண் உத்தரவின்பேரில், டிஜிட்டல் எக்கனாமி(எண்ணியல் பொருளாதாரம்) என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். ஜூனியர் கமிஷன் அதிகாரி சுபைதார் ஜெகத்சிங், கம்பெனி ஹவில்தார் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் வரவேற்றார். நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர் ஆரோக்கிய அமுதன் சிறப்புரை ஆற்றினார். என்சிசி மாணவர்கள் டிஜிட்டல் எக்கனாமி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், வருங்காலத்தில் சிறந்த பொருளாதார வல்லுநர்களாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக, என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் எக்கனாமி குறித்த ஓவிய போட்டி, ஓவிய ஆசிரியர் அலைக்சன் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாணவர்கள் தங்கள் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.முதுகலை இயற்பியல்ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர்கள், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
