வேலூர்:பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!!!
11/17/2025
0
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஊடகவியல் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா பங்களா மேட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் ஆலியார் கிஜர் அஹமத் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் இசர்ட். இம்தியாஸ் அஹமத் முன்னிலை வகித்தார். இதில் கட்சி ஊடக சூப்பர் ஸ்டார் முக்தார் அஹமத், பேர்ணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் டாக்டர். எஸ். கதிரேசன், இர்ஃபான் அஹமத், ஆர். ராஜாமணி ராமு, அறிவழகன், செளந்தரராஜன், குடியாத்தம் பத்திரிகையாளர்கள் யுவராஜ், வெங்கடேசன், சிதம்பரம், நந்தகுமார் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த விழாவில் முன்னாலள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் சின்னவரிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ. ஆர் .காசி விஸ்வநாதன், சி. அதிகுர் ரகுமான், முன்னாள் ராணுவ வீரர் என். இளங்கோவன், எல். ஐ .சி .முகவர் எஸ். கோதண்டன், எஸ். சாம்ராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஆலியார் அர்ஷத் அஹமத், ஆசிரியர் டி. ஏசுதாஸ் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
