பூத் கமிட்டிகள் ஒவ்வொரும் பூத்திலும் ஆண் - பெண் வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர் என்ற புள்ளி விவரத்தை கணக்கீட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொறுப்பாளர்கள் கேட்கும்போது கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், வட்ட செயலாளர், தொண்டர்கள் என, ஏராளமான கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை: செய்யாறில் த.வெ.க. சார்பில்பொறுப்பாளர்களுக்கு பூத் கமிட்டி பயிற்சி!!!
12/10/2025
0
செய்யாறில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொறுப்பாளர்களுக்குபூத் கமிட்டி மற்றும் பயிற்சியாளர் பட்டறை நடந்தது. 500க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் - தொண்டர்கள் கலந்து கொண்டனர்.தமிழக வெற்றி கழகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மூலம் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மக்களை எப்படி அணுக வேண்டும். அவர்கள் முன் வைக்கும் குறைகளை எப்படி கையாள வேண்டும், அடிப்படை வசதிகளுக்கு ஏயங்குபவராகளை நேரடியாக சந்திக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நேற்று செய்யாறில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயகுமார், தொண்டர்கள் -- பொறுப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினார். புதிய மற்றும் இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது. அதன் கையோடு அவர்களை நமது கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து, அடையாள அட்டையை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினர்.
