எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான கோவை 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை' இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது. இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம் குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்த 24 மணிநேர சேவை என்பது 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவர்கள் மற்றும் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சையில் பயிற்சி பெற்ற 40 அவசர செவிலியர்கள் உட்பட, ஒருங்கிணைந்த, பல்துறை அவசர சிகிச்சைக் குழுவால் இயக்கப்படுகிறது.
மேலும் நவீன மறுஉயிரூட்டல் அறைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கிற்கான வசதிகள் ஆகியவை உள்ளன. இது வேகமாக பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையில் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.
