தூத்துக்குடியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் காவல்துறை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு!!!
12/10/2025
0
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
