வேலூர்:காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம்: மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் எ.செந்தில்குமார் வெளியிட்டார்!!!!
12/11/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எ.செந்தில்குமார் தலைமையில் வேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வி.காந்திலால்படேல், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், எ.சீதரன் ஜெயின், ஆனந்தகுமார் ஆர்.சுதாகர், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.பின்னர் 2026ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வேலூர் உதவி ஆட்சியர் எ.செந்தில்குமார் வெளியிட ,அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக் கொண்டார். பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.2026ஆம் ஆண்டிற்கான வருடாந்திர செயல்பாடுகளை வடிவமைத்து உலக ரெட்கிராஸ் தினம், ரெட்கிராஸ் நிறுவனர் தினம், ஜெனிவா ஒப்பந்த தினம், சர்வதேச ரத்த கொடையாளர்கள் தினம், உலக பெண்கள் தினம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.பொங்கல்விழா சிறப்பாக நடத்துவது என்றும் இவ்விழாவில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவது என்றும், ஆண்டு விழாவில் ஆண்டு மலர் வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
