தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!!!
12/18/2025
0
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது.நாசரேத் யோவான் பேராலய சபை ஊழியர் ஜெசு செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், விலங்கியல் முதுகலை ஆசிரியை வத்சலா மேரி, சமூக அறிவியல் ஆசிரியை பால் பத்மஜோதி, அலுவலக முதன்மையாளர் மெர்சி ஜாஸ்மின் ஆகியோர் வேத பாடங்கள் வாசித்தனர். ஆசிரிய, ஆசிரியைகள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களைப் பாடினர். பேராலய உதவிகுரு தனசேகர் ராஜா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை யாவரும் கொண்டாட வேண்டும், எல்லோரையும் நேசிப்போம், எல்லோரையும் உயர்த்துவோம் என்று தனது அருளுரையில் செய்தி வழங்கினார். ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. கீத ஆராதனையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், பாடகர் குழுவினருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஆசிரியர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், வின்ஸ்டன் ஜோசுவா, அம்புரோஸ் சுகிர்தராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஓவிய ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
