ஈரோட்டில் செங்கோட்டையன் புகழாரம் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது விஜய் தான்!!!

sen reporter
0

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது விஜய் தான் என்று கே.ஏ.செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார்.சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் கடந்த சில மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்டார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 9 மணி முதலே மக்கள் கூட ஆரம்பித்தனர். இதனால், அப்பகுதியில்பலத்தபோலீஸ்பாதுகாப்புஅளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மக்கள் சந்திப்பில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது, பெரியார் பிறந்த மண்ணுக்கு வெற்றிக் கழகத்தின் தலைவர் வருகை தந்திருக்கிறார். கடலெனக் கூடியிருக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போது, நாளை தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்ற வரலாற்றை படைக்கக்கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல பேர் கனவு காணுவதாக அனைவரும் கூறினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரையிலும், நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சி தளபதி தான். இதை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது என்பதை பெரியார் மண்ணில் இன்றைக்கு காணமுடிகிறது.தந்தை பெரியார் குறிப்பிட்டது போல ஏழை, எளிய மக்களுடைய கண்ணீரைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டுமென்ற மக்களுடைய பல நாள்கள் கனவு இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கூட்டம் கூடும் கலைந்து போகும், ஆனால் நம்முடைய கூட்டம் என்பது எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற தவெக தலைவருடைய வரலாற்றைப் படைப்பதற்கு இங்கே வருகை தந்திருக்கிறீர்கள்.விஜய்யிடம் வெள்ளி செங்கோலை வழங்கிய செங்கோட்டையன்விஜய் மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனென்றால், ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய். அது தேவையில்லை என உதறி விட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரைப் பார்த்தேன். இன்றைக்கு புரட்சித் தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள்.என்னை பொறுத்தவரை இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்பதை காட்டும் வகையில் இங்கே ஆர்ப்பரித்து நின்று கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய எதிர்காலம் பிரகாசமாக மாறப்போகிறது. 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர் தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றைப் படைக்கிற அளவுக்கு வெற்றியை தருவீர்கள் என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top